/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உட்கார வைத்து சம்பளம்: வரிப்பணம் வீணடிப்பு
/
உட்கார வைத்து சம்பளம்: வரிப்பணம் வீணடிப்பு
ADDED : நவ 10, 2024 04:46 AM

வேலை செய் யாமலே உட்கார வைத்து சம்பளம் கொடுக்கும் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக நீர்வாக குளறுபடியால், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில், கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமங்களில் உள்ள பொது பிரச்னைகளை சரிசெய்ய கொம்யூன் பஞ்சாயத்திற்கு சொந்தமாக ஜீப், பொக்லைன், டிராக்டர் டோசர் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளன.
இதற்காக டிரைவர் நியமிக்கப்பட்டு பணியில் உள்ளனர். இந்த இயந்திரங்கள் மூலம் கிராம பகுதிகளில் குப்பைகளை சுத்தம் செய்தல், சாலையோரங்களில் செடி, கொடிகளை அகற்றுதல், சாலை ஆக்கிரமிப்பு அகற்றுதல் வாய்கால் துார்வாருவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இங்குள்ள ஜே.சி.பி., புல்டோசர் இயந்திரங்களில் பழுதடைந்த சிறு பிரச்னைகளை கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் சரிசெய்யாமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால், கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமங்களில் துப்புரவு பணி மேற்கொள்ளாமல் அப்படியே உள்ளது.
அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் வாடகை இயந்திரங்களை எடுத்து வந்து துப்புரவு பணியில் ஈடுபடுகின்றனர்.
வாடகை இயந்திரம் எடுப்பதால் கொம்யூன் பஞ்சாயத்து டிரைவர்களுக்கு வேலை இல்லாமல் உட்கார வைத்து சம்பளம் வழங்கி வருகின்றனர். இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப் படுகிறது.