/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தார் சாலை அமைக்க சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை.
/
தார் சாலை அமைக்க சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை.
ADDED : மார் 02, 2024 06:29 AM

வில்லியனுார் : வில்லியனுார் திருக்காமீஸ்வரர் நகரில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கிவைத்தார்.
வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் ரூ. 24 லட்சம் செலவில் திருக்காமீஸ்வரர் நகர் விரிவாக்கம் பகுதியில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா பூமி பூஜை செய்து துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணா மற்றும் திருக்காமேஸ்வரர் நகர் முக்கியஸ்தர்கள் ரமணன், தண்டபாணி, கணேஷ், பாலமுருகன், முருகேசன், கன்னியப்பன், வீரபத்திரன், அறிவழகன், சிவக்குமார், ரமேஷ், காமராஜ், தி.மு.க நிர்வாகிகள் மணிகண்டன், செல்வநாதன், சரவணன், கந்தசாமி, ராஜி, சபரிநாதன், சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

