ADDED : ஏப் 30, 2026 02:53 AM

வில்லியனுார்: கதிர்காமம் தொகுதி தி.மு.க., சார்பில், மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிவா எம்.எல்.ஏ., பிறந்த நாளை கொண்டாடினார்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கதிர்காமம் தொகுதி தி.மு.க பொறுப்பாளர் வடிவேல் தலைமையில் மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் தங்கதேர் இழுத்து பிறந்த நாளை கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் சம்பத் எம்.எல்.ஏ., உள்ளிட்ட மாநில மற்றும் தொகுதி நிர்வாகிகள், மகளிர் அணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கினர்.
கதிர்காமம் தொகுதியில் நடந்த சிவா எம்.எல்.ஏ., பிறந்தநாள் விழாவில் தொகுதி பொறுப்பாளர் வடிவேல் தலைமையில் தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினர். நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினர்.
