தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிவசுப்பரமணியர் கோவில் சூரசம்ஹாரம் விழா

சிவசுப்பரமணியர் கோவில் சூரசம்ஹாரம் விழா

சிவசுப்பரமணியர் கோவில் சூரசம்ஹாரம் விழா


ADDED : அக் 28, 2025 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2025 06:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை சிவசுப்பரமணிய கோவிலில் சூரசம்ஹாரம் விழா நேற்று நடந்தது.

லாஸ்பேட்டை சிவசுப்பரமணிய கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

இதையொட்டி தினமும் சுவாமிக்கு இரு வேலையும் யாகசாலை பூஜைகள், சிறப்பு அபி ேஷக ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு சிங்கமுகா சூரன் முருகப்பெருமானுடன் போருக்கு செல்லும் நிகழ்ச்சியை தொடர்ந்து, இரவு 8 மணிக்கு சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று இரவு 8 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கவுசிக பாலசுப்ரமணியர் ரயில் நிலையம் எதிரே பிரசித்திபெற்ற கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று சூரசம்ஹார விழா விமர்சையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us