ADDED : அக் 01, 2025 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: நடிகர்சிவாஜி கணேசன் பிறந்த நாளையொட்டி, கருவடிக்குப்பம் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
இ.சிஆர்., சாலை கருவடிக்குப்பம் சந்திப்பில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலைக்கு சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.,க்கள் சாய் சரவணன்குமார், பாஸ்கர், சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் மாயன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிவாஜி கணேசனின் ரசிகர்கள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.