முதல்வரின் திட்டங்களை எடுத்து கூறி சிவக்கொழுந்து ஓட்டு சேகரிப்பு
முதல்வரின் திட்டங்களை எடுத்து கூறி சிவக்கொழுந்து ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 03, 2026 08:30 PM

புதுச்சேரி: லாஸ்பேட்டை எதிர்கால திட்டங்களை எடுத்துக் கூறி, என்.ஆர்.காங்., வேட்பாளர் சிவக்கொழுந்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
லாஸ்பேட்டை தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் சிவக்கொழுந்து நேற்று திரவுபதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, வீடு வீடாக சென்ற, வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கி, ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு கேட்டார்.
அப்போது அவர், முதல்வர் ரங்கசாமியின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் தமது எதிர்கால திட்டங்களையும் எடுத்துக் கூறினார். தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த திரளான இளைஞர்கள், வேட்பாளர் சிவக்கொழுந்துவுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் செல்வகணபதி எம்.பி., சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் ரமேஷ்குமார், வன்னியர் சங்க தலைவர் நரசிம்மன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
