/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுவர் விளம்பர தகராறு ஆறு பேர் மீது வழக்கு
/
சுவர் விளம்பர தகராறு ஆறு பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 27, 2025 11:22 PM
காரைக்கால்:புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்த நாள் விழா வரும் 4ஆம் தேதி நடக்கிறது. அதை யொட்டி என்.ஆர்., காங்., சார்பில் காரைக்கால் பகுதியில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் எம்.ஜி.ஆர்., நகர் மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்த அந்தோணிசாமி மகன் பிரபா கரன், 36; என்.ஆர் காங்., பிரமுகர். இவர் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து பாரதியார் சாலைகளில் தனியார் சுவர் ஒன்றில் சுவர் விளம்பரம் செய்துள்ளார். இதை அறிந்த நேரு நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார். சின்னக் கோவில் பகுதியை சேர்ந்த மாரி முத்து மற்றும் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சாரதி, சபரி, இளமாறன், பறவை பேட்டை சேர்ந்த பாலா ஆகியோர் விளம்பர செய்ய யார் அனுமதி கொடுத்தது எனக்கேட்டு பிரபாகரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில் நகர போலீசார் 6 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.