/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீசாருக்கு திறன் மேம்பாட்டு தேர்வு
/
போலீசாருக்கு திறன் மேம்பாட்டு தேர்வு
ADDED : ஆக 10, 2025 08:45 AM

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து போலீசாருக்கான திறன்மேம்பாட்டு தேர்வு நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
மத்திய அரசு கடந்த ஆண்டு புதிதாக மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்களை அமல்படுத்தியது. இந்த சட்டங்களின் நன்மைகள், குற்றத்திற்கான வழக்குப் பிரிவுகள், அதற்கான தண்டனை விவரங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படும் வகையில் போலீசார் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், புதிய சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசாருக்கான திறன் மேம்பாட்டு தேர்வு நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் முன்னிலை வகித்தனர். இதில், காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட போலீசார் தேர்வு எழுதினர்.
தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற போலீசாருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், சீனியர் கிரேடு சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.