அரசு மகளிர் பொறியியல் கல்லுாரியில் திறன் மேம்பாடு வழிகாட்டல் நிகழ்ச்சி
அரசு மகளிர் பொறியியல் கல்லுாரியில் திறன் மேம்பாடு வழிகாட்டல் நிகழ்ச்சி
ADDED : ஆக 25, 2026 04:10 PM
புதுச்சேரி: காரைக்கால் மேடு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் பாபு அசோக் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நாகப்பட்டினம் இ.ஜி.எஸ்., பிள்ளை பொறியியல் கல்லுாரியின் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறை தலைவர் சுரேஷ் பாபு கலந்து கொண்டு மாணவிகளுடன் தொழில்நுட்பத் திறன்கள், புத்தாக்கம், தொழில்முனைவோர் திறன் மற்றும் தொழில் சார்ந்த திறன் மேம்பாடு முக்கியத்துவம் குறித்து பேசினார்.
இந்த திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல் நிகழ்ச்சி மூலம் மாணவிகளிடையே திறன் மேம்பாடு, புத்தாக்கம், தொழில் முனைவோர் திறன், வேலைவாய்ப்புக்கு தேவையான திறன்கள் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விமலன் செய்திருந்தார்.
