/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
ADDED : நவ 26, 2025 07:48 AM

புதுச்சேரி: அரியாங்குப்பம் தியாகி துளசிங்கம் அரசு உயர் நிலைப்பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பயிற்சி முகாம் நடந்தது.
ஆசிரியர் கோமதி வரவேற்றார். தலைமை ஆசிரியர் சத்தியவாணி தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பத் பயிற்சி முகாமை துவக்கி வைத்து, மது, கஞ்சா, போதைப் பொருட்களால் தனி மனித வாழ்விலும், சமூகத்திலும் ஏற்படும் பாதிப்புகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கற்றலில் ஏற்படும் தடைகள், ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார்.
எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி கல்வியின் முக்கியத்துவம், அறிவு, தனி மனித ஒழுக்கம், உயர் எண்ணங்கள், தன்னம்பிக்கை, போட்டித் தேர்வுகளை எழுதும் முறைகள், வேலை வாய்ப்புகள், திறன் மேம்பாடு, திரைக் கவர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார்.
தொடர்ந்து, மாணவர்களின் கலந்துரையாடல் நடந்தது. ஆசிரியை ஜெயக்கொடி சகாயமேரி நன்றி கூறினார். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.

