/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நிறைவு
/
போலீஸ் அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நிறைவு
போலீஸ் அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நிறைவு
போலீஸ் அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நிறைவு
ADDED : அக் 25, 2025 06:25 AM

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ், சென்னை தேசிய புலனாய்வு முகமை சார்பில், புதுச்சேரி போலீஸ் அதிகாரிகளுக்கான மூன்று நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், புதுச்சேரி காவலர் பயிற்சி பள்ளியின் கருத்தரங்க கூடத்தில் நடந்தது.
முகாமினை, தேசிய புலனாய்வு முகமையின் முதன்மை எஸ்.பி., சக்தி கணேசன், புதுச்சேரி போலீஸ் சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., கலைவாணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கடந்த 22ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை நடந்த இம்முகாமில், சென்னை தேசிய புலனாய்வு முகமை பப்ளிக் பிராசிக்யூட்டர் சித்திராமுலு, சிறப்பு பப்ளிக் பிராசிக்யூட்டர்கள் சந்துரு, மோகன் ஆகியோர் பங்கேற்று, புதுச்சேரி போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
முகாமினை, தேசிய புலணாய்வு முகமையின் இன்ஸ்பெக்டர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
முகாமின் நிறைவு நாள் வகுப்பு நேற்று நடந்தது. புதுச்சேரி போலீஸ் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமை தாங்கினார். தேசிய புலனாய்வு முகமையின் முதன்மை கண்காணிப்பாளர் சக்தி கணேசன், புதுச்சேரி போலீஸ் சீனியர் எஸ்.பி., கலைவாணன் ஆகியோர் வாழ்த்தி பேசினார். புதுச்சேரியில் உள்ள எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

