/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்லுாரி மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
கல்லுாரி மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : பிப் 19, 2024 04:49 AM

புதுச்சேரி: மகளிர் தொழில்நுட்ப கல்லுாரி மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
காரைக்காலில் உள்ள காரைக்கால்மேடு அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லுாரியில் புதிய பொறியியல் கண்டுபிடிப்புகள் அறிவியல் தொழில்நுட்பம் மூலம் தயாரிப்பது குறித்த விஞ்ஞான திறன் மேம்பாட்டு ஊக்குவிப்பு பயிற்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் சந்தானசாமி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
பெங்களூரு இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் இந்திய அறிவியல் நிறுவன முதன்மை ஆராய்ச்சி விஞ்ஞானி சதீஷ்குமார் பேசியதாவது:
உலகின் பெண் விஞ்ஞானிகள் தலை சிறந்த சாதனைகளை படைத்துள்ளனர்.பாலிடெக்னிக் பொறியாளர்களும்,நாட்டின் தலை சிறந்த இளம் விஞ்ஞானியாக உருவெடுக்க முடியும்.இளைய தலைமுறை பொறியாளர்கள் இடையே விஞ்ஞான அறிவு மேம்பட்டு வருகின்றது.விஞ்ஞான அறிவினை மேம்படுத்த பல்வேறு வாய்ப்புகள் உள்ளன.அவற்றை மாணவிகள் அறிந்து கொண்டு வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ் மேம்பாட்டு பயிற்சியை துறை தலைவர்கள் விமலன்,ராஜபாலன் ஆகியோர் செய்திருந்தனர்.

