/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சின்ன வீராம்பட்டினம் கோவில் கும்பாபிேஷகம்
/
சின்ன வீராம்பட்டினம் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஜன 22, 2024 12:55 AM

அரியாங்குப்பம் : சின்ன வீராம்பட்டினம் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினம் முத்து மாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்து, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷக விழா தொடங்கியது. கடந்த 19ம் தேதி முதல் வேள்வி பூஜை நடந்து வந்தது. நிலத்தேர் வழிபாடு, கலையீர்ப்பு சடங்கு வழிபாடு நடந்தது.
நேற்று முன்தினம் இரண்டாம் கால வேள்வி பூஜை, தொடர்ந்து, சூரிய பூஜை. ஞானதிருமஞ்சனம், தத்துவப் பூஜை, மூன்றாம் வேள்வி பூஜை நடந்தது.
நேற்று காலை 7:30 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை 10:00 மணியளவில், கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.விழாவில், சபாநாயகர் செல்வம் உட்பட ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.