/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி எம்.எல்.ஏ., ஆலோசனை
/
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி எம்.எல்.ஏ., ஆலோசனை
ADDED : ஜன 18, 2025 06:50 AM

புதுச்சேரி: உப்பளம் தொகுதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் நடக்க உள்ள பணிகள் குறித்து அனிபால் கென்னடி ஏம்.எல்.ஏ., நகராட்சி கமஷனர் கந்தசாமியிடம் ஆலோசனை நடத்தினார்.
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதி மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் நடைபெறாமல் உள்ள பணிகள் மற்றும் நடக்க இருக்கும் பணிகள் குறித்து, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் கந்தசாமியை சந்தித்து, நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதில், லதிப் சந்து, பாண்டியன் சந்து, அப்பாவு மேஸ்திரி வீதி, பொண்ணியாகுட்டி வீதி, வ.உசி. வீதி, மொராசன் வீதி சாலை பணிகள், நேதாஜி நகரில் உள்ள சமுதாய கூடத்தில் முதல் தளத்தில் பள்ளிக்கூட பணிகள், பிரான்சுவா தோப்பு, ராசு உடையார் தோட்டம் கழிவறை, குபேர் மண்டபம் புரனமைப்பு, அவ்வை தோட்டம் கல்யாண மண்டபம், ராசு உடையார் தோட்டத்தில் ரயில் நிலையம் வழியே செல்லும் வாய்க் கால் கட்டைகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.