/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு
/
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு
ADDED : டிச 28, 2025 05:51 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு திட்ட பணிகளை, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முடிக்கப்பட்ட பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று நடந்தது.
கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்திரனாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு அரங்கம், 26 கச்சிதமான துணை மின் நிலையங்கள், உயர் மின்னழுத்த புதைவடம் மற்றும்220 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து, மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
விழாவில், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ., அனிபால்கென்னடி, நேரு, பாஸ்கர், அரசு செயலர்கள் ஜவஹர், முத்தம்மா, மணிகண்டன், கேசவன், கலெக்டர் குலோத்துங்கன், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், நகராட்சி ஆணையர்கள் புதுச்சேரி கந்தசாமி, உழவர்கரை சுரேஷ்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

