/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 போட்டி மணக்குள விநாயகர் கல்லுாரி சாதனை
/
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 போட்டி மணக்குள விநாயகர் கல்லுாரி சாதனை
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 போட்டி மணக்குள விநாயகர் கல்லுாரி சாதனை
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 போட்டி மணக்குள விநாயகர் கல்லுாரி சாதனை
ADDED : டிச 25, 2025 05:40 AM

புதுச்சேரி: ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 போட்டியில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் முதல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் துார்தர்ஷன், பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் சார்பில், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025-ன் 8 வது போட்டி, நாடு முழுவதும் 60 மையங்களில் நடந்தது. இதில் புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியை சேர்ந்த இரண்டு அணிகள் வெற்றி பெற்றனர்.
முதல் அணியில் மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறை சேர்ந்த இறுதியாண்டு மாணவர் ஆரோக்கிய ஆனந்த் பிரசாத் தலைமையில், மாணவர்கள் லலித் குமார், அருண் பிரதாப், முகேஷ்குமார், கவிமஞ்சரி, தரணி ஆகியோர் குழுவினரும், முதல் பரிசும்,
இரண்டாவது அணியில், மூன்றாம் ஆண்டு இ.இ.இ., மாணவர் சுரேந்தர் தலைமையில், கோகுல், கவுதம் கண்ணா, ஹரிணி, ஹொன்னேஷா ஜெயின், ஹர்லீன் கவுர் அடங்கிய குழுவினர் விளையாட்டு கிட் மாதிரி வடிவமைத்து முதல் பரிசு பெற்றது. இந்த இரண்டு அணிகளுக்கும் தலா ரூ. 1.5 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
சாதனை புரிந்த மாணவர்களை, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி, ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

