தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகையில்லா தீபாவளி விழிப்புணர்வு ஊர்வலம்

புகையில்லா தீபாவளி விழிப்புணர்வு ஊர்வலம்

புகையில்லா தீபாவளி விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : அக் 17, 2025 11:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2025 11:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில், தீபாவளியை முன்னிட்டு தேசிய மாணவர் படை, சமுதாய நலப்பணித்திட்டம், சாரணர் இயக்கம் சார்பில் புகையில்லா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

பள்ளியின் நிர்வாகி சம்பத் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சுசீலா சம்பத் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். நிர்வாக இயக்குனர் ஹரிஷ்குமார் முன்னிலை வகித்தார்.

ஊர்வலத்தில் புகையில்லா தீபாவளியை வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

பள்ளி வளாகத்தில் துவங்கிய ஊர்வலம் காந்தி வீதி, பிள்ளையார் கோவில் வீதி, வணிகர் வீதி மற்றும் கடைவீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. நிர்வாக இயக்குனர் மோகன் குமார் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை சமுதாய நலப்பணித்திட்ட பொறுப்பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us