தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/எஸ்.எம்.வி. பள்ளி ஆண்டு விழா 

எஸ்.எம்.வி. பள்ளி ஆண்டு விழா 

எஸ்.எம்.வி. பள்ளி ஆண்டு விழா 


ADDED : ஏப் 01, 2026 07:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 07:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மதகடிப்பட்டு, மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் எஸ்.எம்.வி பள்ளியின் 3ம் ஆண்டு விழா நடந்தது.

மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், அறக்கட்டளை உறுப்பினர்கள் நிலா பிரியதர்ஷினி, கீதா, கவிதா, வைஷ்ணவி ராஜராஜன், சூர்யகுமார் தலைமை தாங்கினர்.

பள்ளி முதல்வர் அனிதா சாந்தகுமார், ஆண்டறிக்கை வாசித்தார். மாணவி நேஹா வரவேற்றார். மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி வாழ்த்தி பேசினார். சிறந்த வருகைப் பதிவு செய்த மாணவர்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

விழாவில், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹர்ஷத்கான் பேசுகையில், மாணவர்களின் ஒழுக்கம், கல்வி மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து ஊக்கமளிக்கும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். மதிப்பெண்களை தாண்டி நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மாணவன் ராகுல் நன்றி கூறினார். துணை முதல்வர் இம்மானுவேல் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us