/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
/
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
ADDED : ஜன 09, 2026 08:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவமனை அருகில் பைக் நிறுத்தம் இடத்தில் பாம்பு பிடிக்கப்பட்டது.
இந்திரா காந்தி அரசு மருத்துவமனை அருகில் சாலையோர பைக் நிறுத்தும் இடத்தில் நேற்று காலை பாம்பு ஊர்ந்து சென்றது. அதனை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். அப்போது அருகில் இருந்த ஆட்டோ டிரைவர் சீனுவாசன், 2 அடி நீளமுள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்து, பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்தார். பின் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் ஒப்படைத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

