/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு சமூக நீதி பேரவை கோரிக்கை
/
வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு சமூக நீதி பேரவை கோரிக்கை
வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு சமூக நீதி பேரவை கோரிக்கை
வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு சமூக நீதி பேரவை கோரிக்கை
ADDED : ஜூன் 19, 2025 04:49 AM
புதுச்சேரி : புதுச்சேரி சமூகநீதி பேரவை சார்பில், தமிழ்வழி கல்வி முடித்தவதற்கு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி கவர்னரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பேரவை நிறுவனர் விஸ்வநாதன், தலைவர் நவீன் தண்ராமன், செயலாளர் கீதநாதன் ஆகியோர் கவர்னரிடம் அளித்துள்ள மனு;
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில், தமிழ்வழி கல்வியில் படித்தவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பில், 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசு ஆணை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.ஆகையால், புதுச்சேரியிலும் தமிழகத்தை போன்று, அரசு பள்ளிகளில் தமிழ்வழி கல்வியில் படிப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.