தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சொசைட்டி கல்லுாரி பேராசிரியர்கள் நள்ளிரவு முழுவதும் காத்திருப்பு போராட்டம்: உயர் கல்வி துறையில் பரபரப்பு 

 சொசைட்டி கல்லுாரி பேராசிரியர்கள் நள்ளிரவு முழுவதும் காத்திருப்பு போராட்டம்: உயர் கல்வி துறையில் பரபரப்பு 

 சொசைட்டி கல்லுாரி பேராசிரியர்கள் நள்ளிரவு முழுவதும் காத்திருப்பு போராட்டம்: உயர் கல்வி துறையில் பரபரப்பு 


ADDED : பிப் 03, 2026 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 04:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சொசைட்டி கல்லுாரி பேராசியர்கள் சம்பளம் வழங்காததை கண்டித்து நள்ளிரவு முழுவதும் உயர்கல்வி துறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி உயர்கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம். கலை அறிவியல் கல்லுாரிகள் , பட்டயப்படிப்பு மற்றும் பொறியியல் கல்லுாரிகள் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லுாரிகள் , புதுச்சேரி காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் அரசின் முழு நிதி ஒதுக்கீட்டில் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லுாரிகளில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஆண்டுதோறும் புதுச்சேரி பட்ஜெட்டில், இக்கல்லுாரிகளுக்கு தேவையான ஊதியம் மற்றும் பிற செலவினங்களுக்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டு வருகிறது.

. தற்போது சம்பளம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தை சொசைட்டி கல்லுாரி பேராசிரியர்கள் துவங்கியுள்ளனர். நேற்று வகுப்பறைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்த பேராசிரியர்கள் மாலை 5 மணிக்கு லாஸ்பேட்டை பிம்மேட் உயர் கல்வி துறை எதிரே திரண்டு காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர். விடியற்காலை 6 மணி வரை போராட்டம் தொடர்ந்தது. அங்கேயே படுத்து உறங்கினர். இரண்டாம் நாளாக இன்றும் மாலை 5 மணி முதல் அங்கேயே படுத்து உறங்கி காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us