/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாப்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி பரிசளிப்பு
/
சாப்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி பரிசளிப்பு
ADDED : ஜன 14, 2025 06:30 AM

புதுச்சேரி: தென்மண்டல அளவிலான சாப்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி தாகூர் கலைக் கல்லுாரி மைதானத்தில் 21வது ஆண்கள் மற்றும் பெண்கள் சீனியர் தென்மண்டல அளவிலான சாப்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 11ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடந்தது.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, கோவா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அணிகள் கலந்து கொண்டன. அதில், ஆண்கள் பிரிவில் ஆந்திரா முதலிடம், கேரளா இரண்டாமிடம், தெலுங்கானா மூன்றாம் இடம் பிடித்தன. இதேபோல், பெண்கள் பிரிவில் கேரளா முதலிடம், தெலுங்கானா இரண்டாமிடம், ஆந்திரா மூன்றாமிடம் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.
இதில், தேசிய சாப்ட் பால் அசோசியேஷன் துணை செயலாளர் சோபன்பாபு, சபரி வித்தியாஷ்ரம் பள்ளியின் நிர்வாகி அமுதவாணன், குணசேகரன் உள்ளிட்ட மாநில சாப்ட்பால் அசோசியேஷன் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

