தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாகூர் மூலநாதர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றம்

 பாகூர் மூலநாதர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றம்

 பாகூர் மூலநாதர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றம்


ADDED : டிச 06, 2025 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 06, 2025 05:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் ஸ்ரீ மூலநாதர் சுவாமி கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, மகா தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கார்த்திகை தீப உற்சவம் நடந்தது. இதனையொட்டி, காலை 7:00 மணிக்கு, மூலநாதர், வேதாம்பிகையம்மன், பாலவிநாயகர், முருகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு கோவில் கோபுரத்தின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இரவு 7:30 மணிக்கு கோவிலின் முன் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. சந்திரசேகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் சுவாமி உள் புறப்பாடு நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us