தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சோலார் விழிப்புணர்வு முகாம் விவசாயிகள், பொது மக்கள் ஆர்வம்

சோலார் விழிப்புணர்வு முகாம் விவசாயிகள், பொது மக்கள் ஆர்வம்

சோலார் விழிப்புணர்வு முகாம் விவசாயிகள், பொது மக்கள் ஆர்வம்


ADDED : ஜூன் 22, 2025 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2025 01:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார் : புதுச்சேரி அரசு, மின்துறை சார்பில், பிரதமர் சூரிய ஒளி மின் திட்டம் சார்பில், கரிக்கலாம்பாக்கத்தில் சோலார் பேனல் மூலம் மின்சார திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கரிக்கலாம்பாக்கம் ராஜிவ் காந்தி அரசு சமுதாய நலக்கூடத்தில் நடந்த முகாமிற்கு புதுச்சேரி மின்துறை (தெற்கு பகுதி) கிராம பிரிவு செயற்பொறியாளர்கள் கிருஷ்ணசாமி, செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் சசிகுமார், சக்திவேல், இளநிலை பொறியாளர் முகமது இஸ்மாயில் ஆகியோர் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

புதுச்சேரியை பசுமை மாநிலமாக மாற்றுவோம் என்ற அடிப்படையில் நடைபெற்ற இம்முகாமில், வீட்டின் மேற்குறையில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து கொடுப்பது என்றும், வீட்டின் மீது சோலார் பேனல் அமைப்பதற்கு 6 சதவீதம் வட்டியில் தேசிய வங்கிகளில் எளிமையான முறையில் கடன் வசதிகள் ஏற்பாடு செய்துகொடுத்து வருகின்றனர்.

அவ்வாறு அமைப்பதால் ரூ.78,000 மானியம் கிடைக்கும். சோலார் பேனல் மூலம் 3 கிலோவாட் மின் உற்பத்தி நிலையம் அமைத்தால் வருடத்திற்கு 4,500 யூனிட்கள் மின் உற்பத்தி கிடைக்கும்.வீட்டின் தேவைக்கு போக மீதம் உள்ள மின்சாரத்தை மின்துறை பெற்றுக்கொண்டு, அதற்காக ஒரு யூனிட்டுக்கு 5.77 ரூபாய் வீட்டின் உரிமையாளருக்கு கொடுக்கப்படும்.இதன் மூலம் ஐந்து ஆண்டிற்குள் முதலீட்டை திரும்ப பெறுவது எப்படி என, ஆலோசனை வழங்கினர். மேலும் 6ம் ஆண்டு துவக்கம் முதல் 100 சதவீதம் மின்சாரம் இலவசம். பல்வேறு சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகள் முகாமில் வழங்கப்பட்டது.

முகாம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்கள் நடக்கிறது. நேற்று நடந்த முகாமில் கரிக்கலாம்பாக்கம், கோர்காடு, தனத்துமேடு, ஏம்பலம், கம்பளிகாரன்குப்பம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us