தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வில்லியனுாரில் சூரிய வீடு மின்சார திட்ட முகாம்

வில்லியனுாரில் சூரிய வீடு மின்சார திட்ட முகாம்

வில்லியனுாரில் சூரிய வீடு மின்சார திட்ட முகாம்


ADDED : ஆக 03, 2025 03:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2025 03:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுாரில் சூரிய வீடு இலவச மின்சார திட்ட முகாம் வரும் 5ம் தேதி நடக்கிறது.

மின்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் செய்திக்குறிப்பு :

புதுச்சேரி மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை இணைந்து பிரதம மந்திரி சூரியவீடு இலவச மின்சார திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் வீட்டு மேற்கூரைகளின் மீது சூரிய ஒளி மின் நிலையம் நிறுவுவதன் நன்மைகள் குறித்து மக்கள் அறியவும், இந்த திட்டத்தில் சேரும் வகையில் விழிப்புணர்வு முகாம், வரும் 5ம் தேதி காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை வில்லியனுார், கிழக்கு மாட வீதி, அன்னை திருமண மண்டபத்தில் நடக்கிறது.

இந்த திட்டம் மூலம் வீட்டின் மேற்கூரையில் சூரியமின் உற்பத்தி நிலையம் அமைக்க 1 கிலோ வாட்ஸ் 30 ஆயிரம், 2 கிலோ வாட்ஸ் 60 ஆயிரம், 3 கிலோ வாட்ஸ் மற்றும் அதற்கு மேல் 78 ஆயிரம் ரூபாய் மானியமாக மத்திய அரசு வழங்குகிறது.

இதில், தற்போது வரை 1,290 நுகர்வோர் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை தங்கள் வீட்டு மேற்கூரைகளில் நிறுவியுள்ளனர். இவர்களுக்கு ரூ.9.14 கோடி அளவிற்கு இந்த திட்டத்தின் கீழ் மானியம் அளிக்கப்பட்டுள்ளது.

முகாமில், அனைவரும் பங்கேற்று இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும். கூடுதல் விபரங்கள், வழிகாட்டுதல்கள் பெற மொபைல் 9489080373, 9489080374 மற்றும் ee2ped@py.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும் என, தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us