/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சூரிய வீடு மின்சார திட்டம்: விழிப்புணர்வு முகாம்
/
சூரிய வீடு மின்சார திட்டம்: விழிப்புணர்வு முகாம்
ADDED : அக் 18, 2024 06:21 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை சார்பில் பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் விளக்க முகாம் நடந்தது.
கவுண்டன்பாளையம், முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமிற்கு மின்துறை அரசு செயலர் முத்தம்மா தலைமை தாங்கினார்.
மின்துறை கண்காணிப்பு பொறியாளர் மற்றும் தலைவர் சண்முகம் துவக்கி வைத்தார்.
இதில், செயற்பொறியாளர் செந்தில்குமார், இளநிலை பொறியாளர் லட்சுமி உள்ளிட்ட ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை அதிகாரிகள் லோகநாதன், அருண்பிரகாஷ், ஜான்சன், குமரேசன் ஆகியோர் பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தில் பொது மக்கள் சேர்வதற்கான வழிமுறைகள், இத்திட்டத்தின் மூலம் வீட்டின் மேற்கூரைகளில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பதால், ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.
இதில், பேட்ரிக் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்களின் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டி நடந்தது.