/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சோலார் பேனல் மின்சார திட்டம் விழிப்புணர்வு முகாம்
/
சோலார் பேனல் மின்சார திட்டம் விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 07, 2025 02:20 AM

வில்லியனுார்: புதுச்சேரி அரசு, மின்துறை சார்பில், பிரதம மந்திரி சூரிய ஒளி மின் திட்டம் மூலம் வீடுகளுக்கு சோலார் பேனல் மின்சார திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம், வில்லியனுார் அன்னை திருமண நிலையத்தில் நடந்தது.
புதுச்சேரி மின்துறை (வடக்கு பகுதி) கிராம பிரிவு செயற்பொறியாளர்கள் செந்தில்குமார் மற்றும் ஸ்ரீதர், பூமியான்பேட்டை மின் நிலைய உதவி பொறியாளர் சந்திரசேகர், வில்லியனுார் மின் நிலைய இளநிலை பொறியாளர் ஸ்டாலின் ஆகியோர் தலைமை தாங்கி, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதுச்சேரியை பசுமை மாநிலமாக மாற்றுவோம் என்ற அடிப்படையில் நடந்த இம்முகாமில், வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல் அமைத்து கொடுப்பது என்றும். வீட்டின் மீது சோலர் பேனல் அமைப்பதற்கு 6 சதவீதம் வட்டியில் தேசிய வங்கிகளில் எளிமையான முறையில் கடன் வசதிகள் ஏற்பாடு செய்துகொடுத்து வருகின்றனர்.
அவ்வாறு அமைப்பதால் ரூ.78,000 மானியம் கிடைக்கும். சோலார் பேனல் மூலம் 3 கிலோ வாட் மின் உற்பத்தி நிலையம் அமைத்தால் வருடத்திற்கு 4,500 யூனிட்கள் மின் உற்பத்தி கிடைக்கும். வீட்டின் தேவைக்கு போக மீதம் உள்ள மின்சாரத்தை மின்துறை பெற்றுக்கொண்டு ஒரு யூனிட்டுக்கு ரூ 5.77 பைசா வீட்டின் உரிமையாளருக்கு வ ழங்கப்படும்.
ஐந்து ஆண்டிற்குள் முதலீட்டை திரும்ப பெறுவது எப்படி என ஆலோசனைகளை வழங்கினர். அதன் அடிப்படையில் 6ம் ஆண்டு துவக்கம் முதல் 100 சதவீதம் மின்சாரம் இலவசமாகும்.
மு காமில் வில்லியனுார், சுல்தான்பேட்டை, கணுவாப்பேட்டை, ஆரியப்பாளையம், ஒதியம்பட்டு, அரசூர், பாண்டியன் நகர், சிவகணபதி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.