தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சோலார் பேனல்கள் எரிந்து சேதம்: வேப்பூர் அருகே பரபரப்பு

சோலார் பேனல்கள் எரிந்து சேதம்: வேப்பூர் அருகே பரபரப்பு

சோலார் பேனல்கள் எரிந்து சேதம்: வேப்பூர் அருகே பரபரப்பு


UPDATED : ஜூன் 09, 2026 11:43 PM

ADDED : ஜூன் 09, 2026 11:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 09, 2026 11:43 PM ADDED : ஜூன் 09, 2026 11:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: வேப்பூர் அருகே யார்டில் குவித்து வைக்கப்பட்டிருந்த சோலார் பேனல்கள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த தே.புடையூர் கிராமத்தில், 2.50 ஏக்கர் பரப்பளவில் சோலார் பேனல்கள் திறந்தவெளி கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கோவையை சேர்ந்த வாரீ மற்றும் இ-கிளவுட்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்கள் இணைந்து, சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பு பணியில் ஈடுபட தயாராகி வந்தன.

மூன்று பகுதிகளாக பல கோடி மதிப்பிலான சோலார் பேனல்களை பாதுகாக்கும் பணியில், இரு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 8 மாலை 6:00 மணியளவில், திடீரென ஒரு பகுதியில் குவிந்திருந்த பேனல்கள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிய துவங்கின. வெயிலின் தாக்கம் காரணமாக தீ மளமளவென பரவியது.

தகவலறிந்த திட்டக்குடி, வேப்பூர், விருத்தாசலம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பேனல்கள் எரிந்து சேதமடைந்தன. ஓரிரு நாட்களில் இன்சூரன்ஸ் தொடர்பாக கணக்கிட்ட பின்னரே, முழு சேத விபரம் தெரியவரும் என தெரிவித்தனர்.

இது குறித்து வேப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். திறந்தவெளியில் குவித்து வைத்திருந்த சோலார் பேனல்கள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us