sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முத்தியால்பேட்டையில் நாளை சோலார் திட்ட விழிப்புணர்வு முகாம்

/

முத்தியால்பேட்டையில் நாளை சோலார் திட்ட விழிப்புணர்வு முகாம்

முத்தியால்பேட்டையில் நாளை சோலார் திட்ட விழிப்புணர்வு முகாம்

முத்தியால்பேட்டையில் நாளை சோலார் திட்ட விழிப்புணர்வு முகாம்


ADDED : ஆக 08, 2025 02:06 AM

Google News

ADDED : ஆக 08, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:முத்தியால்பேட்டையில் நாளை சோலார் திட்ட விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.

மின்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் செய்திக்குறிப்பு :

புதுச்சேரி மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை இணைந்து வீட்டு மேற்கூரைகளின் மேல் சூரிய ஒளி மின்நிலையம் நிறுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்கள் அறிந்து கொண்டு, இந்த திட்டத்தில் சேருவதற்கான விழிப்புணர்வு முகாம் நடக்க உள்ளது. பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம் மூலம் இந்த முகாம் நாளை காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை புதுச்சேரி, முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் வீதியில் உள்ள ஸ்ரீ முருகன் மண்டபத்தில் நடக்கிறது.

இந்த திட்டம் மூலம் வீட்டின் மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க 1 கிலோ வாட்டிற்கு ரூ.30 ஆயிரம், 2 கிலோ வாட்டிற்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோ வாட் அதற்கு மேல் ரூ.78 ஆயிரம் மானியமாக மத்திய அரசு வழங்குகிறது.

இந்த திட்டத்தில் தற்போது வரை 1,348 நுகர்வோர்கள் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை தங்கள் வீட்டு மேற்கூரைகளில் நிறுவியுள்ளனர். இவர்களுக்கு ரூ.9.29 கோடிக்கு மானியம் அளிக்கப்பட்டுள்ளது.

முகாமில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று திட்ட பயன்களை அறிந்து கொள்ள வேண்டும்.

இது பற்றிய மேலும் கூடுதல் விபரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு மொபைல் 9489080373, 9489080374 மற்றும் ee2ped@py.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us