/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமராஜ் நகர் தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
/
காமராஜ் நகர் தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
காமராஜ் நகர் தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
காமராஜ் நகர் தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
ADDED : பிப் 09, 2026 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட முத்திரங்க செட்டி நகர், கவிக்கோவில் நகர், சுந்தரமூர்த்தி நகர் பகுதியில் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் உப்புத் தண்ணீர் கலந்து வந்ததால், அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ.,விடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையறிந்த காங்., தொகுதிப் பொறுப்பாளர் தேவதாஸ், பொதுப்பணி சுகாதார பிரிவு துறை அதிகாரிகளுடன் பேசி, புதிதாக போர்வெல் அமைத்து, இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தார்.
இதில், அப்பகுதி காங்., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.