ADDED : அக் 05, 2024 04:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : கல்லுாரிக்கு தேர்வு எழுத சென்ற மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விக்டர் மகன் யோகேஷ், 22. இவர் வீட்டில் இருந்து நேற்று காலை கிளம்பி, வேல்ராம்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லுாரிக்கு தேர்வு எழுத சென்றார்.
மாலை வரை அவர் வீட்டுக்கு வராததால், சந்தேகமடைந்த, அவரது தந்தை, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, விக்டர் முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.