sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மண்ணின் மைந்தர்கள் விழிப்புணர்வு நாள்

/

மண்ணின் மைந்தர்கள் விழிப்புணர்வு நாள்

மண்ணின் மைந்தர்கள் விழிப்புணர்வு நாள்

மண்ணின் மைந்தர்கள் விழிப்புணர்வு நாள்


ADDED : ஆக 17, 2011 04:05 AM

Google News

ADDED : ஆக 17, 2011 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பிரெஞ்சிந்திய புதுச்சேரி பிரதேச விடுதலைக் கால மக்கள் நல நற்பணி இயக்கம் சார்பில், இந்தியாவுடன் புதுச்சேரி இணைக்கப்பட்ட நாளை (ஆக.16ம் தேதி) முன்னிட்டு, மண்ணின் மைந்தர்கள் விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சியில், தியாகி அருள்ராஜ் தலைமையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. குபேர் சிலை அருகில் நடந்த நிகழ்ச்சியில்,பல்வேறு சமூக அமைப்புகள், குபேர் அறக்கட்டளை, நற்பணி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நற்பணி இயக்கத் தலைவர் சிவராஜ் தலைமையில் குபேர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், 2012 ஆக.16ம் தேதி வரை ஓராண்டிற்கு புதுச்சேரி இணைப்பு நாள் பொன் விழாவை கொண்டாடுவது. போலி தியாகிகள் மீது சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். பிரெஞ்சு குடியுரிமையை உதறிவிட்டு புதுச்சேரியோடு இணைந்த மண்ணின் மைந்தர்களுக்கு மத்திய அரசின் பென்ஷன் வழங்க வேண்டும்.

நவம்பர் 1ம் தேதியை புதுச்சேரி சுதந்திர தினமாகவும், ஆகஸ்ட் 16ம் தேதியை புதுச்சேரி குடியரசு தினமாகவும் மத்திய மாநில அரசுகளால் அரசாணை வெளியிடப்பட வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி உறுதி மொழி யேற்கப்பட்டது.






      Dinamalar
      Follow us