/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சோரப்பட்டு பாரதி பள்ளி மாணவிகள்; ஜுஜுட்சு ஜூனியர் போட்டியில் சாதனை
/
சோரப்பட்டு பாரதி பள்ளி மாணவிகள்; ஜுஜுட்சு ஜூனியர் போட்டியில் சாதனை
சோரப்பட்டு பாரதி பள்ளி மாணவிகள்; ஜுஜுட்சு ஜூனியர் போட்டியில் சாதனை
சோரப்பட்டு பாரதி பள்ளி மாணவிகள்; ஜுஜுட்சு ஜூனியர் போட்டியில் சாதனை
ADDED : டிச 31, 2025 03:31 AM

திருக்கனுார்: சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில், தேசிய ஜுஜுட்சு ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி களுக்கு பாராட்டு விழா நடந்தது.
உத்தரகாண்டில் ஹல்த்வானியில் உள்ள சர்வேதச இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் டிச., 19 முதல் 23ம் தேதி வரை தேசிய அளவிலான ஜுஜுட்சு ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் பங்கேற்க சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளி மாணவிகள் இருவர், சங்க தலைவர் மதி ஒளி தலைமையில், தேசிய நடுவர் விக்னேஷ்வரும் உடன் சென்றனர்.
இப்போட்டியில், 22 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் இருந்து 975 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலை பள்ளி மாணவிகள் யஸ்வந்தா, இரண்டு போட்டியில் வெண்கல பதக்கங்கள், இனியா ஒரு போட்டியிலும் வெண்கல பதக்கம் வென்றனர்.
இவர்களுக்கான பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. தாளாளர் சம்பத், தலைமை ஆசிரியை சுசீலா சம்பத் தலைமை தாங்கி, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினர். மூத்த பயிற்சியாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.