/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தென்னிந்திய கபடி போட்டி : குருவிநத்தம் அணி வெற்றி
/
தென்னிந்திய கபடி போட்டி : குருவிநத்தம் அணி வெற்றி
ADDED : செப் 10, 2025 11:28 PM

பாகூர்:தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில், குருவிநத்தம் செங்கதிர் விளையாட்டு கழக அணி,முதல் இடம் பிடித்து, பரிசு கோப்பையை கைப்பற்றியது.
புதுச்சேரி மாநில, கபடி சங்கத்தின் அனுமதியோடு, குருவிநத்தம் பெரியார் நகர் செங்கதிர் விளையாட்டு கழகம் சார்பில், இரண்டாம் ஆண்டு தென்னிந்திய அளவிலான கபடி போட்டி நடந்தது. குருவிநத்தம் பெரியார் நகர் விளையாட்டு திடலில் இரண்டு நாட்கள் நடந்த இப்போட்டியில், புதுச்சேரி, விழுப்புரம், கடலுார்,விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 48 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், குருவிநத்தம் செங்கதிர் விளையாட்டு கழக அணியும், உண்ணாமலை சாவடி அம்மன் பிரதர்ஸ் அணியும் மோதின. இதில், செங்கதிர் விளையாட்டு கழகம் 23 புள்ளிகள் பெற்று முதல் பரிசை வென்றது.
அம்மன் பிரதர்ஸ் அணி இரண்டாம் இடமும், குருவிநத்தம் டி.டி.ஆர்., விளையாட்டு கழக அணி மூன்றாம் பரிசும், இரண்டாயிரவிளாகம் ராம்ஜி பிரதர்ஸ் அணி நான்காம் இடம் பிடித்தன.
பரிசளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் தியாகராஜன், என்.ஆர்.பாசறை மாநில தலைவர் கனகராஜ் ஆகியோர் பங்கேற்று, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்புகளை வழங்கினார். செந்தில்குமார், ஆனந்தன், கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மதீஷ், மேனன், பார்த்திபன், ராகுல் காந்தி ஆகியோர் செய்திருந்தனர்.