தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தென் மண்டல கிரிக்கெட் புதுச்சேரியில் துவங்கியது

 தென் மண்டல கிரிக்கெட் புதுச்சேரியில் துவங்கியது

 தென் மண்டல கிரிக்கெட் புதுச்சேரியில் துவங்கியது


ADDED : பிப் 12, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 04:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்திய கணக்காய்வு மற்றும் கணக்குத்துறை சார்ந்த தென் மண்டல அலுவலகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, புதுச்சேரி, துத்திப்பட்டு சி.ஏ.கெம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.

போட்டியினை சென்னை, தெற்கு ரயில்வேயின் கணக்காய்வு தலைமை இயக்குநர் அம்பலவாணன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை ஒருங்கிணைப்பாளர் திருப்பதி வெங்கடசாமி முன்னிலை வகித்தார். விளையாட்டு மைதானத்தின் பிரதிநிதி தாமோதரன், மூத்த துணை கணக்காய்வாளர் சுகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய தென் மண்டல மாநிலங்களில் உள்ள அலுவலகங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. 13ம் தேதி இறுதிப்போட்டி நடக்கிறது.

ஏற்பாடுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான முதன்மை கணக்காய்வாளர் அலுவலகத்தினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us