/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தெற்கு மண்டல குத்துச்சண்டை தமிழ்நாடு அணி சாம்பியன்
/
தெற்கு மண்டல குத்துச்சண்டை தமிழ்நாடு அணி சாம்பியன்
தெற்கு மண்டல குத்துச்சண்டை தமிழ்நாடு அணி சாம்பியன்
தெற்கு மண்டல குத்துச்சண்டை தமிழ்நாடு அணி சாம்பியன்
ADDED : ஜன 16, 2025 06:00 AM

புதுச்சேரி: தெற்கு மண்டல குத்துச்சண்டை போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றது.
புதுச்சேரி அமெச்சூர் பாக்சிங் அசோசியேஷன் சார்பில், உறுவையாறு ஆச்சார்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தெற்கு மண்டல அளவிலான குத்து சண்டை சாம்பியன் ஷிப் போட்டி கடந்த 10ம் தேதி தொடங்கியது.
இதில் புதுச்சேரி, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதன் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.
இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழக அணி பெற்றது. 2வது இடத்தை ஆந்திரா அணி பிடித்தது. இந்த போட்டியில் புதுச்சேரியை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தலா 3 தங்கம், வெள்ளிப் பதக்கம், 4 வெண்கல பதக்கம் வென்றனர்.
பரிசளிப்பு விழாவிற்கு, புதுச்சேரி அமெச்சூர் பாக்சிங் அசோசியேஷன் தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கோபு, துணைத்தலைவர் முத்துகேசவலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார்.
ஒலிம்பியன் அர்ஜூனா விருது பெற்ற வெங்கடேஷன் தேவராஜன், சர்வதேச குத்துச்சண்டை வீரர் சேவியர், ஒருங்கிணைப்பாளர் ஜெயமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.