/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தென் மண்டல 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான கிரிக்கெட் தொடர்
/
தென் மண்டல 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான கிரிக்கெட் தொடர்
தென் மண்டல 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான கிரிக்கெட் தொடர்
தென் மண்டல 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான கிரிக்கெட் தொடர்
ADDED : பிப் 13, 2025 05:02 AM

புதுச்சேரி: தென் மண்டல 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான கிரிக்கெட் தொடரில், நேற்று முன்தினம் (11ம் தேதி) மூன்று போட்டிகள் நடந்தன.
புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஹைதராபாத், கோவா ஆகிய மாநில கிரிக்கெட் சங்கங்கள் இணைந்து தென் மண்டல 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான 2 நாள் கிரிக்கெட் தொடர், புதுச்சேரி, துத்திப்பட்டு சீகெம் மைதானங்களிலும், லட்சுமி நாராயணா மருத்துவ கல்லுாரி மைதானத்திலும் கடந்த 27ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் ( 11ம் தேதி) சீகெம் மைதானம் 1ல் நடந்த போட்டியில் தமிழ்நாடு அணியும், கேரளா அணியும் மோதின. முதலில் ஆடிய கேரளா அணி 104 ரன்களில் ஆட்டம் இழந்தது.
தொடர்ந்து, ஆடிய தமிழ்நாடு அணி 313 ரன்கள் எடுத்தது. 2வது இன்னிங்ஸ் ஆடிய கேரளா அணி ஆட முடிவில் 9 விக்கெட் இழந்து 202 ரன்கள் எடுத்தது. டிராவில் முடித்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணியின் கவுசிக் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
சீகெம் மைதானம் 2ல் நடந்த போட்டியில் ஆந்திரா அணியும், கர்நாடகா அணியும் ஆடின. முதலில் ஆடிய கர்நாடகா அணி 266 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. பின்னர், ஆடிய ஆந்திரா அணி 191 ரன்களில் ஆட்டம் இழந்தது. டிராவில் முடிந்த ஆட்டத்தில் கர்நாடகா அணியின் பூரப் சோனி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
சீகெம் மைதானம் 3ல் நடந்த போட்டியில் ஹைதராபாத் அணியும், புதுச்சேரி அணியும் மோதின. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 260 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.
தொடர்ந்து, ஆடிய புதுச்சேரி அணி 189 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. டிராவில் முடிந்த ஆட்டத்தில் புதுச்சேரி அணியின் அஹிந்தியன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.