/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊர்க்காவல் படைவீரருக்கு எஸ்.பி., பாராட்டு
/
ஊர்க்காவல் படைவீரருக்கு எஸ்.பி., பாராட்டு
ADDED : ஏப் 15, 2025 09:06 PM

புதுச்சேரி; நாய் உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களுக்கு தொட்டி வைத்து தண்ணீர் ஊற்றி வரும் ஊர்க்காவல் படை வீரரை சீனியர் எஸ்.பி., பாராட்டியுள்ளார்.
புதுச்சேரியில் வெயில் அதிகரிப்பால், மக்கள் பகல் நேரங்களில் வெளியில் வரமுடியாமல், வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். மாலை நேரங்களில் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர். வெயில் தாக்கம் அதிகரிப்பால், சுற்றுலா இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில், ஊர்காவல் படையில் பணியாற்றி வரும் பிரவீன், பெரியக்கடை போலீஸ் ஸ்டேஷன் முன்பு சிறிய தொட்டி அமைத்து, அதில், வாயில்லா ஜீவன்கள், நாய் உள்ளிட்ட விலங்கினங்களுக்கு குடிக்க, தினமும், தண்ணீர் ஊற்றி வருகிறார். மனித நேயத்துடன் செய்து வரும், அவரது நற்செயலை சீனியர் எஸ்.பி., கலைவாணன் பாராட்டி வாழ்த்தியுள்ளார்.

