ADDED : செப் 28, 2026 05:13 PM
பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சோரியாங்குப்பம் வி.ஜ.பி., நகர் பகுதியில், ரகளையில் ஈடுபட்ட கடலுார் முதுநகரை சேர்ந்த செந்தில்நாதன் 37; என்பவரை கைது செய்தனர். கரையாம்புத்துார் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்குள்ள பஸ் நிறுத்த பகுதியில் ரகைளையில் ஈடுபட்ட பத்திரக்கோட்டையை சேர்ந்த கவியரசன் 20; என்பவரை கைது செய்தனர்.
இதேபோல், கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, பரிக்கல்பட்டு சாலையில் ரகளையில் ஈடுபட்ட குறிஞ்சிப்பாடியை சேர்ந்த சந்திரன் 60; கன்னியக்கோவில்– பாகூர் சாலையில் ரகளையில் ஈடுபட்ட வடுகுப்பாளையத்தை சேர்ந்த சஞ்ஜெய் 22; மற்றும் பாதிரிக்குப்பத்தை சேர்ந்த அருண்குமார் 22; ஆகியோரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர்.
