/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணவெளியில் 100 நாள் வேலை சபாநாயகர் துவக்கி வைப்பு
/
மணவெளியில் 100 நாள் வேலை சபாநாயகர் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 12, 2025 03:21 AM

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில் 13.38 லட்சம் மதிப்பீல் நுாறு நாட்கள் வேலை பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம், மணவெளி தொகுதி ஆண்டியார்பாளையம் பகுதியில் 6.13 லட்சம் மதிப்பில் அல்லிகுட்டை வாய்க்காலை துார்வாரி ஆழப்படுத்தும் பணியை சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார்.
அதே போல, டோல்கேட் பகுதியில் உள்ள செங்காட்டு வாய்க்காலை, 7.25 லட்சம் மதிப்பில் துார்வாரி ஆழப்படுத்தும் பணியையும் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், இளநிலை பொறியாளர் சிவஞானம் பணி ஆய்வாளர் கணேசன், பா.ஜ., பிரமுகர், ஞானசேகர், பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.