/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குளம் துார் வாரும் பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
/
குளம் துார் வாரும் பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
ADDED : ஆக 13, 2025 02:45 AM

புதுச்சேரி : மணவெளி மற்றும் ஓடைவெளி பகுதியில் உள்ள இரண்டு குளங்களை,10.50 லட்சம் ரூபாயில் துார்வாரும் பணியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், மணவெளி தொகுதி மணவெளி வீரன் கோவில் பகுதியில் உள்ள வீரன் குளத்தை 5 லட்சம் ரூபாய் செலவில் துார்வாரி ஆழப்படுத்துதல், ஓடைவெளி பகுதியில் உள்ள தாழை குளத்தை 5.50 லட்சம் ரூபாய் செலவில் துார்வாரி ஆழப்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கானபூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. சபாநாயகர் செல்வம் பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், இளநிலை பொறியாளர் சிவஞானம், பணி ஆய்வாளர் கணேசன் மற்றும் மணவெளி காமராஜ், செழியன், தங்கதுரை, செந்தில், சசி, முரளி, அருள், ஓடைவெளி ராமச்சந்திரன், டாக்டர் ராஜ்குமார், ரவிசங்கர், சேகர், முருகையன், பிரபு, ஆனந்தன், ராஜி உட்பட பலர் பங்கேற்றனர்.