/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை, வடிகால் பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
/
சாலை, வடிகால் பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
ADDED : ஜூன் 19, 2025 04:48 AM

அரியாங்குப்பம் : தவளக்குப்பத்தில், 39.81 லட்சம் மதிப்பில் தார் சாலை மற்றும் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
மணவெளி தொகுதி, தவளக்குப்பம், லலிதா நகர் பகுதியில் கழிவு நீர் வடிகால் வாய்க்கால் வசதி மற்றும் சாலை வசதிகள் இல்லாததால் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர். எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுத்து நியமன எம்.எல்.ஏ., அசோக்பாபு, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 39.81 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்கான பணியை சபாநாயகர் செல்வம், அசோக் பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில்,அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து கமிஷனர் ரமேஷ், உதவிப் பொறியாளர் நாகராஜ் இளநிலை பொறியாளர் அகிலன், பா.ஜ., மாவட்ட தலைவர் சுகுமாரன், தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.