/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.68 லட்சத்தில் சாலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
/
ரூ.68 லட்சத்தில் சாலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
ரூ.68 லட்சத்தில் சாலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
ரூ.68 லட்சத்தில் சாலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
ADDED : நவ 27, 2025 04:27 AM

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில் 68 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
நோணாங்குப்பத்தில், கள்ளுக்கடை மேடு முதல் புதுக்குப்பம் வரை 22.72 லட்சம் ரூபாய் மதிப்பில், சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை, சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து, அதே பகுதியில் உள்ள கந்தேஸ்வரர் நகர் மற்றும் அண்ணாமலை நகர் ஆகிய பகுதிகளுக்கு 18 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி, மணவெளி சீனுவாச அவென்யூவில், 27.43 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை, சபாநாயகர் துவக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் கொம்யூன் கமிஷனர் வினாயகமூர்த்தி, உதவிப்பொறியாளர் நாகராஜன், இளநிலைப்பொறியாளர் சுரேஷ், செழியன் உட்பட பலர் உடனிருந்தனர்.