/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அமைச்சருடன் சபாநாயகர் சந்திப்பு
/
மத்திய அமைச்சருடன் சபாநாயகர் சந்திப்பு
ADDED : பிப் 19, 2024 04:53 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த கூடுதல் நிதி வழங்க வேண்டும் என மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கிஷன்ரெட்டியை சந்தித்து சபாநாயகர் செல்வம் கோரிக்கை வைத்தார்.
டெல்லி சென்றுள்ள சபாநாயகர் செல்வம், நேற்று மத்திய சுற்றுலா மற்றும் கலாசார துறை அமைச்சர் கிஷன் ரெட்டி சந்தித்தார். அப்போது சபாநாயகர் செல்வம், புதுச்சேரி மாநிலத்தில் செயல்படுத்தப்படும் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும் புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு கூடுதல் நிதி மற்றும் உதவிகளை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். சந்திப்பின்போது புதுச்சேரி மாநில பா.ஜ., துணைத் தலைவர் ஜெயக்குமார் உடனிருந்தார்.

