/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபை கோப்பு காலதாமதம் குறித்து மத்திய உள்துறையிடம் நேரடியாக புகார் தெரிவிப்பேன் சபாநாயகர் செல்வம் ஆவேசம்
/
சட்டசபை கோப்பு காலதாமதம் குறித்து மத்திய உள்துறையிடம் நேரடியாக புகார் தெரிவிப்பேன் சபாநாயகர் செல்வம் ஆவேசம்
சட்டசபை கோப்பு காலதாமதம் குறித்து மத்திய உள்துறையிடம் நேரடியாக புகார் தெரிவிப்பேன் சபாநாயகர் செல்வம் ஆவேசம்
சட்டசபை கோப்பு காலதாமதம் குறித்து மத்திய உள்துறையிடம் நேரடியாக புகார் தெரிவிப்பேன் சபாநாயகர் செல்வம் ஆவேசம்
ADDED : பிப் 23, 2024 03:32 AM
புதுச்சேரி: புதுச்சேரி புதிய சட்டசபை கட்ட தடையாக இருக்கும் கவர்னர் குறித்து மத்திய உள்துறையிடம் நேரடியாக புகார் தெரிவிப்பேன் என சபாநாயகர் செல்வம் கூறியுள்ளார்.
இது குறித்து சபாநாயகர் செல்வம் நேற்று கூறியதாவது:
புதுச்சேரிக்கு புதிய சட்டசபை கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு கவர்னர் தடையாக உள்ளார். சட்டசபை கட்ட 100 சதவீதம் மத்திய அரசு சிறப்பு நிதியாக தர முன் வந்துள்ளது. அப்படி இருக்கும்போது எங்கே ஆடம்பரம் உள்ளது.
புதிய சட்டசபை கட்டும் கோப்பினை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சமர்பிக்கும் முன் மாநில நிர்வாகியாக இருக்கும் கவர்னர் ஒப்புதலுக்காக கடந்தாண்டு அக்டோபர் மாதம் அனுப்பப்பட்டது.
ஆனால் கவர்னர் கையொப்பமிட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்புவதற்கு பதிலாக மத்திய உள்துறை கோரி இருந்தபடி கோப்பு சரியாக தயாரிக்கப்படவில்லை என்பது போன்ற விளக்கங்களை கேட்டு பொதுப்பணித் துறைக்கு திரும்பி அனுப்பினார்.
மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டதா அல்லது கவர்னரே இப்படி விளக்கம் கேட்டு அனுப்பினாரா என்ற கேள்வியை முன் வைக்கிறேன்.
சட்டசபை கோப்பினை கவர்னர் உள்துறை அமைச்சருக்கு அனுப்பி, மத்திய அரசுக்கு சந்தேகம் எழுந்து இருந்தால் அந்த விளக்கத்தினை தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பி கேட்டு இருப்பர்.அது தான் நடைமுறை. ஆனால் அப்படி மத்திய உள்துறை விளக்கம் கேட்கவில்லை.
அப்படி இருக்கும்போது சட்டசபை கோப்பினை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பாமலேயே கவர்னர் விளக்கம் கேட்கிறேன் என்ற பெயரில் கோப்பினை காலதாமதப்படுத்த வேண்டிய அவசியம் என்ன. தற்போது பொதுப்பணித் துறை அனைத்து விளக்கங்களும் விரிவான முன்மொழிவினை சமர்பித்துள்ளது.
அப்படி இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காமல் கவர்னர் பரிசீலனையில் வைத்திருப்பது ஏன்?
இதற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்தும் காலதாமதத்திற்கு யார் காரணம். புதிய சட்டசபை கட்டடத்திற்கு அனுமதி கேட்டு 50க்கும் மேற்பட்ட முறை கவர்னரை சந்தித்துவிட்டேன். ஓரிரு தினங்களில் முடித்து விடுவதாக கவர்னர் சொல்லி 5 மாதம் முடிந்துவிட்டது.
இன்னும் கொஞ்சம் காலம் பார்ப்பேன்.இல்லையெனில் இது சம்பந்தமாக மத்திய உள்துறையிடம் நேரடியாக புகார் தெரிவிப்பேன். கவர்னர் இந்த கோப்பினை விரைந்து முடிவெடுத்து மத்திய உள்துறையின் ஒப்புதலுக்காக சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு சபாநாயகர் கூறினார்.