/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபைக்கு டிமிக்கி கொடுக்கும் அதிகாரிகள் சபாநாயகர் செல்வம் இறுதி எச்சரிக்கை
/
சட்டசபைக்கு டிமிக்கி கொடுக்கும் அதிகாரிகள் சபாநாயகர் செல்வம் இறுதி எச்சரிக்கை
சட்டசபைக்கு டிமிக்கி கொடுக்கும் அதிகாரிகள் சபாநாயகர் செல்வம் இறுதி எச்சரிக்கை
சட்டசபைக்கு டிமிக்கி கொடுக்கும் அதிகாரிகள் சபாநாயகர் செல்வம் இறுதி எச்சரிக்கை
ADDED : மார் 18, 2025 04:18 AM
புதுச்சேரி: சட்டசபைக்கு வராத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
புதுச்சேரி சட்டசபை நடக்கும்போது, அரசு செயலர்கள், இயக்குநர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். அமைச்சர்கள் கேட்கும் பதில்களை தர வேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டு அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டது.
ஆனாலும் அரசு செயலர்கள், இயக்குநர்கள் சட்டசபை வளாகத்தில் வரவில்லை. இதேபோல் சனி, ஞாயிறுகளில் சட்டசபைக்கு அமைச்சர்கள் வந்தாலும், அதிகாரிகள் வருவதில்லை. இது தொடர்பாக சபாநாயகர் செல்வத்திடம் அமைச்சர்கள் புகார் தெரிவித்தனர்.
அதையடுத்து புதுச்சேரி சட்டசபையில் பூஜ்ய நேரத்துக்கு பிறகு சபாநாயகர் செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சட்டசபை நடக்கும் போது கேள்விகளுக்கு பதில் தயார் செய்ய சனி, ஞாயிறுக்கிழமைகளில் அமைச்சர்கள் வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் வருவதில்லை என்று புகார் வருகிறது. மக்கள் பிரதிநிதிகள் கேள்விகளுக்கு தவறான தகவல் தருவதோடு பதில் தர காலதாமதம் செய்கின்றனர்.
சபைக்கு அதிகாரிகள் வரவேண்டும். குறிப்பாக துறை இயக்குநர்கள் பேரவை நடக்கும்போது இங்கு இருக்கவேண்டும். செயலர்கள், இயக்குநர்கள் பதில் தரவேண்டும். இந்த விஷயத்தில் அதிகாரிகளை முதல்வர் கருணையுடன் பல முறை மன்னித்து விடுகிறார். இனி தண்டனை தரப்படும். இதுவே இறுதி எச்சரிக்கையாகும். இவ்வாறு சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டார். இதனிடையே சபாநாயகரின் எச்சரிக்கையை தொடர்ந்து அரசு செயலர்கள், இயக்குநர்கள் சட்டசபைக்கு விரைவாக வந்து சேர்ந்தனர்.