/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீட்பு பணிகளில் சபாநாயகர் தீவிரம்
/
மீட்பு பணிகளில் சபாநாயகர் தீவிரம்
ADDED : டிச 04, 2024 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: டி.என்.பாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை, சபாநாயகர் செல்வம் பார்வையிட்டார்.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், டி.என்.பாளையம் பகுதியில் வெள்ள நீர் புகுந்தது. அங்கு குடியிருந்தவர்கள், தேசிய மீட்பு படையினர் மூலம் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இடங்களை, சபாநாயகர் செல்வம் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, வெள்ள நீர் சூழ்ந்துள்ள முள்ளோடை, காட்டுக்குப்பம் துணை மின் நிலையங்களை பார்வையிட்டார்.