வருவாய் அலுவலங்களில் சான்றிதழ் வழங்க சிறப்பு ஏற்பாடு
வருவாய் அலுவலங்களில் சான்றிதழ் வழங்க சிறப்பு ஏற்பாடு
ADDED : மே 23, 2026 04:10 AM
புதுச்சேரி: உழவர்கரை, புதுச்சேரி வருவாய் அலுவலங்களில் சிறப்பு சான்றிதழ் வழங்க இன்றும், நாளையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சப் கலெக்டர் தயானந்த் தெண்டுல்கர் வெயிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நீட், சென்டாக் மற்றும் பல்வேறு இதர தொழில்முறை கல்லுாரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்காக குடியிருப்பு, வருமானம், ஜாதி சான்றிதழ்கள் பெற உழவர்கரை, புதுச்சேரி வருவாய்துறையில் விண்ணப்பங்கள் கொடுத்துள்ளவர்கள், சான்றிதழ் பெற கால தாமதமடையாமல் மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான சான்றிதழ்களை, காலவரையறைக்குள் சமர்ப்பிக்க சிறப்பு வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி உழவர்கரை, புதுச்சேரி தாலுகாக்களுக்குட்பட்ட அனைத்து வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர்கள், தாலுகா அலுவலகங்கள் இன்று மற்றும் நாளை இயங்கும். இந்த சிறப்பு வேலை நாளில் கல்வி சேர்க்கைக்கு தேவையான சான்றிதழ்களை பெற விரும்பும் பொதுமக்கள், மாணவர்கள், இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வறு கூறப்பட்டுள்ளது.
