/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் இன்று நிழல் இல்லா நாள் அறிவியல் இயக்கம் சிறப்பு ஏற்பாடு
/
புதுச்சேரியில் இன்று நிழல் இல்லா நாள் அறிவியல் இயக்கம் சிறப்பு ஏற்பாடு
புதுச்சேரியில் இன்று நிழல் இல்லா நாள் அறிவியல் இயக்கம் சிறப்பு ஏற்பாடு
புதுச்சேரியில் இன்று நிழல் இல்லா நாள் அறிவியல் இயக்கம் சிறப்பு ஏற்பாடு
ADDED : ஏப் 21, 2025 04:37 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று (21ம் தேதி) நிகழும், 'நிழல் இல்லா நாள்' குறித்து அறிந்து கொள்ளும் வகையில், புதுவை அறிவியல் இயக்கம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது என்பது பொது கருத்து. ஒரு வருடத்தின் இரண்டு நாட்கள் மட்டுமே சூரியன் சரியாக கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறது.
அந்நாட்களில் பொருளின் நிழலானது, அப்பொருளுக்கு மிகச் சரியாக கீழே விழுவதால் நாம் அப்பொருளின் நிழலை மதிய உச்சி வேளையில் கூட காண இயலாது. அந்த நாள் நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ஜிய நிழல் நாள் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி, புதுச்சேரியில் இன்று (21ம் தேதி) நிழல் இல்லா நாள் நிகழ உள்ளது.
இதற்காக, புதுச்சேரி கல்வித்துறையின் சமகர சிக்க்ஷா, புதுவை அறிவியல் இயக்கமும் இணைந்து, புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் 218 பள்ளிகளிலும், அந்தந்த பகுதிகளில் வரும் நிழல் இல்லா நாள் சூரிய திருவிழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இதற்காக, இவ்வருடம் பள்ளி ஆசிரியருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் இன்று (21ம் தேதி) நிகழும் நிழல் இல்லா நாளை கண்டு களிக்க, பொது மக்கள் தங்கள் வாழிடத்திற்கு அருகில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு சென்று நிழல் இல்லா நாளில் நடைபெறும் சூரிய திருவிழாவைக் கொண்டாடலாம்.
காலை 10.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நிகழும் நிழலில்லா நாளில் அறிவியல் செயல்பாடுகள் குறித்து பள்ளிகளில் ஏற்பாடு செய்துள்ள கருவிகளின் துணையுடன் அறிந்து கொள்ளலாம்.