தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருநள்ளாறு சனிப் பெயர்ச்சிக்கு சிறப்பு ஏற்பாடு: தருமை ஆதினம்

 திருநள்ளாறு சனிப் பெயர்ச்சிக்கு சிறப்பு ஏற்பாடு: தருமை ஆதினம்

 திருநள்ளாறு சனிப் பெயர்ச்சிக்கு சிறப்பு ஏற்பாடு: தருமை ஆதினம்


ADDED : பிப் 24, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 04:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமை ஆதீன 27வது குருமகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாவது;

சனீஸ்வர பகவான் மார்ச் 6ம் தேதி காலை 8:24 மணிக்கு, கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியில் 46 ஆண்டுகளுக்கு பிறகு சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய கிரகணங்கள் கடந்த 20ம் தேதி முதல் 10 நாட்கள் நேர் கோணத்தில் செயல்பட்டு வருகிறது.

இத்தருணத்தில், சப்த நதிகளில் இருந்து புனித நீர் கொண்டு வந்து சிறப்பு பூஜை செய்து திருநள்ளாறு நளன்குளத்தில் சேர்க்கப்பட்டது.

மேலும், நேற்று முன்தினம் முதல் வள்ளி தேவசேனா சமேத சுப்பரமணியர் புறப்பாடு, சக்தி ஹோமம், சனி ஹோமம் உள்ளிட்ட முக்கிய பூஜைகள் வரும் 28ம் தேதி வரை நடக்கிறது.

பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளது.

ஆதினம் மூலம் கல்வி நிறுவனம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது, 100 படுக்கை கொண்ட இலவச மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு போல், புதுச்சேரி அரசு ஒத்துழைத்தால் கல்வி நிறுவனம், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us